குரு பெயர்ச்சி 2021!அதிர்ஷ்ட பலன்கள்!!!Part -2

 குரு பெயர்ச்சி துலாம்,தனுசு மற்றும் கும்பம் ராசிகளுக்கான அதிர்ஷ்ட பலன் என்ன?என்பதை இதில் காண்போம்.


துலாம் ராசிக்காரர்களே!
குருவின் 9ம் பார்வை மிக சிறப்பானது. இதுவரை தடைப்பட்டு வந்த உங்கள் முயற்சிகள், செயல்களில் வெற்றி உண்டாகும்.
சம்பாதிக்கும் விலைமதிப்பற்ற பணத்தை செலவழிக்க இருமுறை யோசிப்பார்கள் திருமண தடையால் மனக்குழப்பத்திலிருந்த துலாம் ராசியினருக்கு நல்ல வரன் அமையும். வெளியூர், வெளிநாடு பயணங்களை எதிர்நோக்கி இருந்த துலாம் ராசியினருக்கு 9ம் பார்வையால் கனவு நினைவாகும். சிலருக்கு வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்க அனுமதி கிடைக்கும்.

கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். போட்டி தேர்வில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு போட்டி, தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்று நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.



தனுசு ராசி அன்பர்களே!
குருவின் சிறப்பான பார்வை பெறும் இடங்களின் அடிப்படையில் தனுசு ராசியினர் மிக சிறப்பான பலனைப் பெறுவீர்கள். குருவின் பார்வை, ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்ப்பதால்,எந்த ஒரு முயற்சிகளும் வெற்றி தரும். திருமண முயற்சிகள் நிறைவேறும். புதிய பங்குதாரர், புதிய வாய்ப்புகள் உங்கள் தொழிலில் கிடைக்கும். தொழில் மாற்றம் ஏற்படலாம்.
வெளியூர், வெளிநாடு தொடர்பான வேலை அல்லது தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதில் நல்ல வெற்றியும், லாபமும் அடைவீர்கள். ராசிக்கு 9ம் இடத்தை நேரடியாக பார்ப்பதால், உங்கள் ராசிக்கு பாக்கியத்தை அனுபவிக்க இருந்த தடைகள் நீங்கும். ஏதேனும் ஒரு வகையில் பெரியவர்களின் அன்பு, ஆலோசனை கிடைக்கும். தந்தை அல்லது அதைப் போன்ற பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.அவர்களின் ஆலோசனையால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் பிரச்னைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

கும்ப ராசிக்காரர்களே!


குரு பகவான் ஜென்ம குருவாக கும்பத்திற்கு அமர்கிறார். இதைத் தவிர எல்லாமே உங்களுக்கு சிறப்பானதாக தான் இருக்கிறது.
ஜென்ம குருவாக இருந்தாலும், அவரின் பார்வை 5,7,9 ஆகிய இடங்களில் பதிவதால் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் குழந்தை பேறு உண்டாகும். திருமண தடை சந்தித்து வந்தவர்களுக்கு நல்ல
வரன் அமையும்.

இதுவரை இருந்த சொத்து தொடர்பான வில்லங்கங்கள் நீங்கும். குருவின் பார்வையால் உங்களுக்குரிய பாக்கியம், யோகத்தை அனுபவிக்க எந்த ஒரு தடையோ அல்லது பிரச்சனையோ இருக்காது.விரய சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கும்ப ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியால் ஆறுதல் தருவதாகவும், அதைத் தாண்டி அதிர்ஷ்டம் தருவதாகவும் இருக்கும்.

மற்ற ராசிகள் இந்த ராசிகளை விட சற்று குறைவான அதிர்ஷ்டங்கள் பெறும்.மேலும் ஜோதிட சார்ந்த தகவலுக்கு ஆஸ்க்ஜோசியர் வலைத்தளத்தை அணுகவும்.

Comments

Popular posts from this blog

Online Josiyam Tamil Service -Remedies For Job Problems

Get Predictions from Best Palm Astrologer - Ask Josiyar

KILI JOTHIDAM-PARROT ASTROLOGY