திருக்கார்த்திகை தீப திருநாள்-2021

 



ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் எல்லோரும் தங்கள் வீட்டின் முன்பு விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள். இந்த நாள் சிவபெருமானுக்கு உகுந்த நாளாக கூறப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமான் தீப ஒளியாக காட்சி தருவார். இதன் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையன்று திருவண்ணாமலை கோவிலில் சார்பில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏறப்படுகிறது.



19 நவம்பர் 2021 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானது.


கார்த்திகை தீபம் திருவிழா தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். இந்த கார்த்திகை தீப தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள சிவபெருமான் மற்றும் முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது உங்களை அண்டியிக்கும் எத்தகைய தோஷங்களையும் போக்கும். இந்த நாளன்று மாலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகிக்கொண்டே செல்லும்.

கார்த்திகை தீப திருநாள் அன்று சரியாக 27 அகல்விளக்குகளில் தீபம் ஏற்றுவது சிறந்தது. புத்தம் புதிய அகல்விளக்குகளில் தீபம் ஏற்றுவது நல்லது. தீபத்திற்கு விளக்கெண்ணெய் அல்லது பசுநெய்யை பயன்படுத்துவது நன்மையான அதிர்வுகளை வீட்டில் உண்டாக்கும். வீட்டின் தெற்கு திசை தவிர மற்ற அணைத்து திசைகளிலும் தீபம் ஏற்றுவதால் வீட்டில் தெய்வங்களின் அருள் நிறையச் செய்யும். வீட்டின் முற்றத்தில் 4 தீபங்கள், பின்படிக்கட்டில் 4 தீபங்கள், கோலமிட்ட வாசலில் 5 தீபங்கள், திண்ணையில் 4 தீபங்கள், வாசல் நடையில் 2, மாடக்குழியில் 2, நிலைப்படியில் 2, சுவாமி படியருகே 2, சமையலறையில் 1 தீபம் மற்றும் வீட்டு வாசலுக்கு வெளியே 1தீபம் என மொத்தம் 27 தீபங்களை மேற்சொன்ன முறையில் வைக்கவேண்டும்.

வீட்டின் வாயிற்படியில் லட்சுமியின் அம்சம் நிறைந்த குத்துவிளக்கில் தீபமேற்றி வைப்பது வீட்டில் லட்சுமி கடாச்சத்தை உண்டாக்கும். வீட்டின் பூஜையறையில் அரிசிபொரியை நைவேத்தியமாக வைத்து சிவபெருமானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபடுவதால் உங்களின் பாவ வினைகள் நீங்கப்பெற்று சிவபெருமானின் அருட்கடாச்சம் உங்களுக்கு கிடைத்து வாழ்வில் பல நன்மையான விடயங்கள் ஏற்பட தொடங்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீப திருநாளில் அனைவரும் சகல ஐஸ்வரியங்களை பெற ஆஸ்க்ஜோசியர்.காம் இன் வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

KILI JOTHIDAM-PARROT ASTROLOGY

Vasiya Poojas-Askjosiyar

VEDIC ASTROLOGY