குரு பெயர்ச்சி 2021!அதிர்ஷ்ட பலன்கள்!!!



குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. மேலும் குரு தனது 2,5,7,9,11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர். அந்த வகையில் 2021ம் ஆண்டு குரு பெயர்ச்சியின் காரணமாக மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு மிக சிறப்பான அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.




இங்கு குரு பகவான் கும்ப ராசியில் அமர்ந்திருப்பதன் அடிப்படையில் குரு நல்ல அதிர்ஷ்ட பார்வை பலனைப் பெறப்போகும் ராசிகள் ஆறு. அவர்களுக்கான பலன் எப்படி இருக்கும் மற்றும் முதல் மூன்று ராசிகளான மேஷம்,மிதுனம்,சிம்மம் ஆகியவற்றிற்கு குருபெயர்ச்சி அதிர்ஷ்ட பலன் என்ன? என்பதை இதில் பார்ப்போம்.

மேஷ ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகியவற்றின் மீது விழுவதால் உங்கள் முயற்சிகள் சிறக்கும். தைரியமாக முடிவுகளை எடுத்து செயலில் இறங்குவீர்கள்.புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
காதலில் இருப்பவர்களுக்கு கை கூடும். திருமணம், புத்திர பாக்கியம் கை கூடும்.


சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புகழ் உண்டாகும். திருமணத்தால் ஆதாயமும், மறுமண முயற்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ற வரன் அமையும்.11ல் குரு இருப்பதால் உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களின் ஆலோசனை பெரிய முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும்.
குல தெய்வ வழிபாடு செய்வது அவசியம்.

மிதுனம் ராசிக்காரர்களே!

குரு பெயர்ச்சியால் அற்புத பலன்களைப் பெறப்போகும் அடுத்த ராசியினர் நீங்களே. ஏற்கனவே அஷ்டம சனியால் குடும்பத்தில் கஷ்டம், விபத்து, வேலையின்மை என மிக கடினமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு,குருவின் 5ம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலனைப் பெற உள்ளீர்கள்.திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குபவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். 


உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். பெரியவர்களின் அருள், ஆசி கிடைக்கும்.குரு, புதன் வழிபாடு செய்வதும், இஷ்ட தெய்வங்களை தொடர்ந்து வழிபட்டு வருவதால், உங்கள் வெற்றிக்கு எந்த தடையும் ஏற்படாது.




சிம்ம ராசியினரே!


குரு பகவானின் பார்வை அமைப்பு இதுவரை ஆறாம் இடத்தில் விழுந்து, சங்கடங்களை அனுபவித்து வந்த சிம்ம ராசியினர். தற்போது குருவின் நேர் எதிர் பார்வையான 7ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது மிகவும் விசேஷமானது.வேலை, தொழில், சுற்றுலா தொடர்பாக வெளிநாடு, வெளியூர் பிரயாணங்கள் செய்ய திட்டமிட்டு நிறைவேறாமல் இருந்தவர்களின் கனவு நிறைவேற நல்ல வாய்ப்பாக அமையும்.


இதுவரை இருந்த கடன், வம்பு, வழக்கு, நோய், வில்லங்கங்கள் போன்ற மோசமான நிலை நீங்கி விடுதலைப் பெற வாய்ப்புகள் அமையும்.திருமணம், குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு அவர்களின் விருப்பம் நிறைவேறி, குடும்பமே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிறப்பான வாழ்க்கை துணை உங்களுக்கு அமைவார்கள்.

Comments

Popular posts from this blog

KILI JOTHIDAM-PARROT ASTROLOGY

Vasiya Poojas-Askjosiyar

VEDIC ASTROLOGY