திருக்கார்த்திகை தீப திருநாள்-2021
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் எல்லோரும் தங்கள் வீட்டின் முன்பு விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள். இந்த நாள் சிவபெருமானுக்கு உகுந்த நாளாக கூறப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமான் தீப ஒளியாக காட்சி தருவார். இதன் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையன்று திருவண்ணாமலை கோவிலில் சார்பில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏறப்படுகிறது. 19 நவம்பர் 2021 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானது. கார்த்திகை தீபம் திருவிழா தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். இந்த கார்த்திகை தீப தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள சிவபெருமான் மற்றும் முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது உங்களை அண்டியிக்கும் எத்தகைய தோஷங்களையும் போக்கும். இந்த நாளன்று மாலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகிக்கொண்டே செல்லும். கார்த்திகை தீப திருநாள் அன்று சரியாக 27 அகல்விளக்குகளில் தீபம் ஏற்றுவது சிறந்தது. புத்தம்